தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலம்

ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலம்

ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலம்


UPDATED : நவ 01, 2026 11:32 PM

ADDED : நவ 01, 2026 07:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2026 11:32 PM ADDED : நவ 01, 2026 07:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை, சிங்கம்புணரி, புதுவயலில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அணி வகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.

விஜயதசமி விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் சிவகங்கை, சிங்கம்புணரி, புதுவயலில் இன்று (நவ.,1) ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. சிவகங்கையில் நடந்த ஊர்வலத்திற்கு நாச்சியப்பன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தனர். பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் சத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இன்று மாலை 4:00மணிக்கு சிவன் கோயிலில் இருந்து அணிவகுப்பு ஊர்வலம் துவங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் சிவன் கோயிலை வந்தடைந்தது. அங்கு பொதுக்கூட்டமும் நடந்தது. அரண்மனை வாசலில் கொடிக்கு பா.ஜ., மாவட்ட துணை தலைவர் சுகனேஸ்வரி தலைமையில் மீனாதேவி, காசி பிரியா உள்ளிட்டோர் மலர் துாவி மரியாதை செய்தனர். கூடுதல் எஸ்.பி., சுகுமார் தலைமையில் டி.எஸ்.பி., அமல அட்வின் உட்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

* காரைக்குடி : புதுவயலில் நடந்த அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டத்திற்கு செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி தாளாளர் சத்தியன் தலைமை வகித்தார். மாயாண்டி முன்னிலை வகித்தார். முத்துக்குமார் பேசினார். ஊர்வலத்தை குணசேகரன் துவக்கிவைத்தார். உய்யவந்தம்மன் கோயிலில் ஊர்வலம் துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பஸ் ஸ்டாண்டில் நிறைவு பெற்றது. கூடுதல் எஸ்.பி., (சைபர் கிரைம்) உதயகுமார், டி.எஸ்.பி.,க்கள் கண்ணன், கண்ணதாசன், புருேஷாத்தமன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

* சிங்கம்புணரி: இங்கு ஆசிரியர் (ஓய்வு) தனுஷ்கோடி தலைமை வகித்தார். செந்தில்குமார் முன்னிலை வகித்தார். முன்னாள் என்.எஸ்.ஜி. கமாண்டோ சுந்தர் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று சீரணி அரங்கை அடைந்தது. அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் பண்பாட்டு வகுப்புகள் மாநில அமைப்பாளர் பரமேஸ்வரன் பேசினார். இங்கு 200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us