/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஊரக வளர்ச்சி அலுவலர்கள் அரசை கண்டித்து இன்று மறியல்; சங்க பொது செயலாளர் தகவல்
/
ஊரக வளர்ச்சி அலுவலர்கள் அரசை கண்டித்து இன்று மறியல்; சங்க பொது செயலாளர் தகவல்
ஊரக வளர்ச்சி அலுவலர்கள் அரசை கண்டித்து இன்று மறியல்; சங்க பொது செயலாளர் தகவல்
ஊரக வளர்ச்சி அலுவலர்கள் அரசை கண்டித்து இன்று மறியல்; சங்க பொது செயலாளர் தகவல்
ADDED : ஜன 07, 2025 12:20 AM
சிவகங்கை; ஊரக வளர்ச்சித்துறையில் காலி பணியிடங்களை நிரப்புவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் இன்று (ஜன., 7) மாநில அளவில் கலெக்டர் அலுவலகங்கள் முன் மறியல் நடக்கிறது என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில பொது செயலாளர் பாரி தெரிவித்தார்.
ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலர்கள் உட்பட அனைத்து நிலை பணியிடங்களை நிரப்ப வேண்டும். சிறப்பு, தேர்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். வேலை உறுதித்திட்டத்திற்கு தனி ஊழியர்களை நியமிக்க வேண்டும். தமிழக அரசின் இலவச வீடு வழங்கும் திட்டம் உட்பட அனைத்து புதிய திட்டங்களுக்குரிய ஊழியர்களை நியமிக்க வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின் அளித்த தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இவை உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஜன.,7) மாநில அளவில் கலெக்டர் அலுவலகங்கள் முன் மறியலில் ஈடுபட அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர்.
சிவகங்கையில் இத்துறை அலுவலர்கள் சங்க மாநில பொது செயலாளர் பாரி கூறியதாவது: ஊராட்சி செயலர்களுக்கு மருத்துவ உள்ளிட்ட விடுப்புகளுக்கு அனுமதியளிக்க வேண்டும்.
'ஸ்டிரைக்' கில் ஈடுபட்ட 21 நாட்களை தகுதியேற்பு விடுப்பு நாட்களாக கணக்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்பதாக அரசு தெரிவித்தது.
ஆனால் இதுவரை அதற்கான அரசாணை வெளியிடப்படவில்லை.
இதை கண்டித்து இன்று கலெக்டர் அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடக்கிறது என்றார்.