/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பணியிட மாறுதலின்றி பணிபுரியும் விற்பனையாளர்கள் கிராமப்புற விற்பனையாளர்கள் புகார்
/
பணியிட மாறுதலின்றி பணிபுரியும் விற்பனையாளர்கள் கிராமப்புற விற்பனையாளர்கள் புகார்
பணியிட மாறுதலின்றி பணிபுரியும் விற்பனையாளர்கள் கிராமப்புற விற்பனையாளர்கள் புகார்
பணியிட மாறுதலின்றி பணிபுரியும் விற்பனையாளர்கள் கிராமப்புற விற்பனையாளர்கள் புகார்
ADDED : மே 15, 2025 04:59 AM
சிவகங்கை,:சிவகங்கை மாவட்ட ரேஷன் கடைகளில் 10 ஆண்டாக விற்பனையாளர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 9 தாலுகாக்களில் கூட்டுறவு மற்றும் மொத்த விற்பனை பண்டக சாலை, நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் 662 முழுநேர, 167 பகுதி நேரம் என 829 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இக்கடைகளின் மூலம் மாவட்ட அளவில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 300 கார்டுதாரர்கள் அரிசி, சர்க்கரை, பாமாயில், கோதுமை உள்ளிட்ட பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
இக்கடைகளில் 662 விற்பனையாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் முழுநேர கடையுடன், பகுதி நேர கடைகளையும் சேர்த்து பார்க்கின்றனர். இந்நிலையில் ரேஷன் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு 3 ஆண்டுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் வழங்க வேண்டும். அப்போது தான், ரேஷன் கடைகளில் எந்தவித முறைகேட்டிற்கும் இடமின்றி, மக்களுக்கு உரிய பொருட்களை விற்பனை செய்வார்கள் என்பது அரசின் நோக்கம் ஆகும்.
ஆனால், இம்மாவட்டத்தில் ஒரே ரேஷன் கடையில் 9 முதல் 10 ஆண்டு வரை விற்பனையாளராக பலர் பணிபுரிவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக நகர்புற கடை விற்பனையாளர்கள், கிராமப்புற கடைகளுக்கு மாறுதல் பெற்று செல்வதில்லை. இதனால் பல ஆண்டுகளாக கிராமப்புறங்களிலேயே விற்பனையாளர்கள் பணிபுரிவதால், அதிக கார்டுகள் உள்ள நகர்புற கடைகளில் பணிபுரிவதற்கான வாய்ப்போ, அனுபவமோ இன்றி தவித்து வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் விற்பனையாளர்களை 3 ஆண்டுக்கு ஒரு முறை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என கிராமப்புற ரேஷன் கடை விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மாறுதலுக்கு முட்டுக்கட்டை
கூட்டுறவு அதிகாரிகள் கூறியதாவது, விற்பனையாளர்களுக்கு 3 ஆண்டுக்கு ஒரு முறை பணியிட மாறுதல் வழங்க வேண்டும். அப்போது தான் நகர்புற கடை விற்பனையாளர், கிராம கடைகளிலும், கிராம கடை விற்பனையாளர்கள் நகர்புற கடைகளில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும்.
இதன் மூலம் அனைத்து விற்பனையாளர்களும் நல்ல அனுபவம் பெறுவார்கள். அதிகாரிகள் பணியிட மாறுதல் பட்டியல் சேகரித்தாலே, அமைச்சர், அரசியல் கட்சியினரின் சிபாரிசுக்கு சென்று விடுகின்றனர். இதனால் தொடர்ந்து 10 ஆண்டாக விற்பனையாளர்களுக்கு பணியிட மாறுதலே வழங்க முடியவில்லை, என்றனர்.