/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எஸ்.கரிசல்குளம் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி விழா நாளை துவக்கம்

ADDED : மார் 28, 2025 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை, : மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளம் கிராமத்தில் உள்ள கேட்ட வரம் தரும் முத்து மாரியம்மன் கோயில் விழா நாளை 29ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது.
தினம்தோறும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை,பூஜை நடைபெற உள்ளன. பங்குனி பொங்கல் ஏப்.6ம் தேதி நடைபெற உள்ளது. மாலை6:00 மணிக்கு எஸ்.கரிசல்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பால்குடம், பூக்கரகம்,தீச்சட்டிகள்,கரும்பாலை தொட்டில், ஆயிரங்கண் பானை மற்றும் அலகுகள் குத்தி ஊர்வலமாக வந்து கோயில் முன் அமைக்கப்பட்டுள்ள பூக்குழியில் தீமிதித்து அம்மனை வழிபட உள்ளனர்.