ADDED : டிச 03, 2024 05:45 AM

மானாமதுரை: சிவகங்கை சமஸ்தானம்,தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் கார்த்திகை மாதத்தின் 3வது சோமவாரத்தை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கும், நந்தியம் பெருமானுக்கும் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.பின்னர் சோமநாதர் சுவாமி சன்னதி வளாகத்தில் 108 சங்குகளை வைத்து ஹோமங்கள் வளர்க்கப்பட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு அபிஷேக,ஆராதனை, பூஜை நடைபெற்றன.
*இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர், ஞானாம்பிகை அம்மன் கோயில்,
சாலைக்கிராமம் வரகுணேஸ்வரர் கோயில்களில் அதிகாலை சுவாமிகளுக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது பின்னர் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றன.
* சிங்கம்புணரி அருகே முறையூரில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது. இதையொட்டி டிச. 1 ம் தேதி யாகசாலை பூஜை தொடங்கி நடந்தது. நேற்று காலை 10:30 மணிக்கு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து புனித நீரைக்கொண்டு சொக்கநாதருக்கு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.