தேவகோட்டையில் பூட்டியே கிடக்கும் சுகாதார கூடுதல் கட்டடம்
தேவகோட்டையில் பூட்டியே கிடக்கும் சுகாதார கூடுதல் கட்டடம்
UPDATED : நவ 01, 2026 11:35 PM
ADDED : நவ 01, 2026 05:44 PM

தேவகோட்டை: தேவகோட்டை நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டடம் திறக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இங்குள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் நெருக்கடியான கட்டடத்தில் இயங்கி வருவது குறித்து தினமலரில் செய்தி வெளியானது. இதையடுத்து கூடுதல் கட்டடம் கட்டினர். இங்கு தினமும் 150 புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். மேலும் கர்ப்பிணிகள் தொடர் ஆலோசனைக்கும் வந்து செல்கின்றனர். இந்த கட்டடத்தில் நெறுக்கடி தொடர்ந்ததால் ரூ.75 லட்சத்தில் கூடுதல் கட்டடம் கட்டி, சிலமாதத்திற்கு முன் திறக்கப்பட்டது. இந்த கட்டடம் திறந்து வைத்து 4 மாதங்களுக்கு மேலாகியும் கூடுதல் கட்டடத்தை திறக்கவில்லை. இங்கு டாக்டர்,போதிய நர்சுகள் உள்ளனர். பழைய மற்றும் கூடுதல் கட்டடத்திற்கு இடையே இணைப்பு பாதை இல்லை. இதனால் சுற்றி சுற்றி செல்ல வேண்டும் என்பதற்காக கூடுதல் கட்டடத்தை செயல்படுத்தாமல் வைத்துள்ளனர். இவ்விரு கட்டடத்திற்கான இணைப்பு பாதை அமைத்து தர வேண்டும். சுற்றுச்சுவர் வசதியும் இல்லாததால், பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என புகார் தெரிவித்தனர்.
