/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வேடன் நகர் மக்களுக்கு பாதுகாப்புடன் இடம் அளவீடு
/
வேடன் நகர் மக்களுக்கு பாதுகாப்புடன் இடம் அளவீடு
ADDED : நவ 20, 2024 07:11 AM
காரைக்குடி,: காரைக்குடி வேடன்நகரில் 100க்கும் மேற்பட்ட நரிக்குறவ இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, காரைக்குடியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நடந்த இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி 106 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது.
பட்டா வழங்கப்பட்ட நிலையில் அவர்களுக்கான இடம் வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து தாலுகா அலுவலகத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். அதனைத் தொடர்ந்து நேற்று போலீஸ் பாதுகாப்புடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு இடங்களை ஒப்படைக்கும் நோக்கில் திருவேலங்குடி பைபாஸ் அருகே அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை அளவிடும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர்.