ADDED : செப் 04, 2025 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழடி: கீழடியில் வையை உழவர் குழு சார்பில் 5 வது ஆண்டாக விதை திருவிழா செப்டம்பர் 7ம் தேதி நடைபெற உள்ளது.
விதை திருவிழா ஒருங்கிணைப்பாளர் கருணாகரசேதுபதி கூறுகையில்: பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக ஆண்டு தோறும் கீழடியில் விதை திருவிழா நடத்தப்படுகிறது. விவசாயிகளுக்கு இயற்கை உரம், பாசன முறை, பாரம்பரிய நெல் ரகங்கள் உள்ளிட்டவை இதன் மூலம் தெரியப்படுத்தபடுகிறது. இந்தாண்டு விதை பரவல் என்ற திட்டத்தின் அடிப்படையில் விவசாயிகளுக்கு தென் மதுரை மரபு வழி விதைகள் வழங்கப்பட உள்ளது.
பரவலாக பாரம்பரிய நெல் ரகங்கள் பரவ தொடங்கி விடும். காலை ஏழு மணிக்கு கீழடியில் இருந்து முளைப்பாரி ஊர்வலம் தொடங்கி பசியாபுரம் ரயில்வே கேட் அருகே உள்ள திருமண மண்டபம் வரை நடைபெறுகிறது.அதன்பின் விதை திருவிழா தொடங்குகிறது, என்றார்.

