/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் வீடுகளில் தொடர் திருட்டு
/
திருப்புத்துாரில் வீடுகளில் தொடர் திருட்டு
ADDED : டிச 29, 2025 06:46 AM
திருப்புத்தூர்: திருப்புத்தூர் நகரின் மத்திய பகுதியில் குடியிருப்புகள் அதிகமான ஒரே பகுதியில் ஒரே இரவில் அடுத்தடுத்து 4 வீடுகளில் திருடர்கள் நுழைந்து நடத்தியுள்ள திருட்டுச்சம்பவம் அப்பகுதி மக்களை அச்சமடைய செய்துள்ளது.
திருப்புத்தூர் அருகே சின்னதோப்பு தெருவில் சேவுகன் வீட்டிற்கு அருகில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் வீட்டின் பின்புறமுள்ள ஓட்டு கொட்டகையில் ஓட்டை பிரித்து இறங்கி பீரோவில் இருந்த கேமரா, வெள்ளி பொருட்கள் ரோலக்ஸ் வாட்ச், ரூபாய் 6 ஆயிரத்தை திருடி சென்றனர்.
பக்கத்து வீட்டில் பத்மாவதி என்பவர் ஊருக்கு போயிருந்த நிலையில் அவரது வீட்டிலும் பின்புறமாக நுழைந்து 1 பவுன் நகை, வெள்ளி பொருட்களை திருடியுள்ளனர். கல்லாகுழி தெருவில் சண்முகம் வீட்டில் நுழைந்து 4 பவுன் நகை மற்றும் பணம், வெள்ளி பொருட்களை திருடி சென்றனர்.
அப்பகுதியை சேர்ந்த அயூப்கான் வீட்டில் திருட்டு முயற்சி நடந் துள்ளது.
இதுபோன்று ஒரு சில நாட்களில் ஆட்களே இல்லாத வீடுகளை நோட்டமிட்டு திருட்டுசம்பவத்தில் மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளதால், மக்கள் அச்சத்தில் தவிக்கின்றனர்.

