/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இ- சேவை மையங்களில் சர்வர் பழுது; கல்வி உதவித்தொகை இழுபறி.. மாற்றுத்திறனாளி மாணவர்கள் புலம்பல்

ADDED : செப் 30, 2025 08:02 AM
சிவகங்கை; தமிழகத்தில் இ--சேவை மையங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் மாநில அளவில் 21 லட்சம் பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள், உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2,000, 6 முதல் எட்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவருக்கு ரூ.6,000, ஒன்பது முதல் பிளஸ் 2 வரை ரூ.8,000, பட்டப்படிப்பிற்கு ரூ.12,000, தொழிற்கல்வி மற்றும் முதுகலை பட்டபடிப்பிற்கு ரூ.14,000 வீதம் வழங்கப்படுகிறது.
இதை பெற இ--சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு வாரத்திற்கும் மேலாக இ--சேவை சர்வர் இணைப்பு சரிவர கிடைப்பதில்லை. இதனால் விண்ணப்பிக்க செல்வோர் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் கூறியதாவது:
இ--சேவை சர்வரை மேம்படுத்தும் பணிகள் நடக்கிறது. இதனால் சற்று இடர்பாடு உள்ளது. விரைவில் பிரச்னை சரியாகும். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் நேரடியாக மனு செய்யலாம் என்றார்.