/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை கர்ப்பிணிகளுக்கு சிக்கல்
/
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை கர்ப்பிணிகளுக்கு சிக்கல்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை கர்ப்பிணிகளுக்கு சிக்கல்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை கர்ப்பிணிகளுக்கு சிக்கல்
ADDED : நவ 15, 2024 07:03 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 52 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது. மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 5 டாக்டர்கள், மற்ற சுகாதார நிலையங்களில் தலா 2 டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும்.
பள்ளி மாணவர்களை பரிசோதிக்க தலா 2 பேர், நடமாடும் மருத்துவமனைக்கு தலா ஒருவர் இருக்க வேண்டும். மாவட்ட சுகாதாரத் துறையில் மொத்தம் 176 டாக்டர் பணியிடங்கள் உள்ளன. இதில் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது.
இந்த காலி பணியிடங்களும் நீண்ட காலம் நிரப்பப்படாமல் உள்ளது.இதனால் சிகிச்சை அளிப்பதிலும், பள்ளி மாணவர்களை பரிசோதிப்பது, நடமாடும் மருத்துவமனை போன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது.
பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் பற்றாக்குறை காரணமாக கர்ப்பிணிகளுக்கு அறுவை சிகிச்சைக்கு வசதியில்லாததால் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
டாக்டர்கள் பற்றாக்குறை உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்களை பணியமர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மாவட்ட சுகாதார அலுவலர் மீனாட்சி கூறுகையில், 138 டாக்டர்கள் பணியில் உள்ளனர். இதில் சிலர் மருத்துவ விடுப்பில் உள்ளனர். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் டாக்டர்கள் 24 மணி நேரமும் பணிபுரிகின்றனர். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.