/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு தொடக்க பள்ளிகளுக்கானஇலவச பாடபுத்தகம் தட்டுப்பாடு மாணவர்கள் தவிப்பு

ADDED : பிப் 03, 2024 04:33 AM
சிவகங்கை : அரசு பள்ளிகளில் மூன்றாம் பருவம் தொடங்கிய பின்னரும், 2 மற்றும் 4, 5ம் வகுப்பிற்கான புத்தகங்கள் இன்னும் மாணவர்களுக்கு வந்துசேரவில்லை என புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்ட தொடக்க கல்வித்துறையின் கீழ் அரசு தொடக்க, நடுநிலை பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவ பாட வகுப்பு துவங்கி, ஒரு மாதத்திற்கு மேலாகிறது.
இந்நிலையில் அரசு பள்ளிகளில் படிக்கும் தொடக்க பள்ளி மாணவர்களுக்கு, பெரும்பாலான பள்ளிகளுக்கு இன்னும் அரசின் இலவச பாடபுத்தகம் சென்று சேரவில்லை என புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக இரண்டாம்வகுப்பு மாணவர்களுக்கான 2ம் தொகுதி (கணக்கு, சூழ்நிலையியல்)மற்றும் 4, 5 வகுப்பு மாணவர்களுக்கு தொகுதி ஒன்று (தமிழ், ஆங்கிலம்) ஆகிய பாட புத்தகங்கள் இது வரை வழங்கப்படவில்லை.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர்களிடம் தொடர்ந்து கேட்டு வருவதால், ஆசிரியர்கள் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
எனவே தொடக்க கல்விதுறை நிர்வாகம், அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச பாடபுத்தகத்தை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.