/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சீருடையில் எஸ்.ஐ., துாக்கிட்டு தற்கொலை
/
சீருடையில் எஸ்.ஐ., துாக்கிட்டு தற்கொலை
ADDED : மே 23, 2025 03:03 AM

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், மடப்புரம் ராஜ்குமார், 53; காளையார்கோவில் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணிபுரிந்தார். இரண்டு ஆண்டுகளாக கீழச்செவல்பட்டியில் பணிபுரிந்தவர், கடந்த மாதம் பணிமாறுதலில், காளையார்கோவில் வந்தார். மே 12 முதல் 17 வரை விடுப்பில் இருந்தார்.
தன், 17 வயது மகன், சில ஆண்டுகளுக்கு முன் இறந்ததால், மனவேதனையில் இருப்பதாகவும், தனக்கு விருப்ப ஓய்வு தரும்படியும், இரண்டு நாட்களுக்கு முன் கடிதம் கொடுத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, ரோந்து பணியில் ஈடுபட்ட ராஜ்குமார், நேற்று மதியம் பணிக்கு வரவில்லை. சக போலீசார் அவரை மொபைல் போனில் அழைத்தபோதும் எடுக்கவில்லை.
இதற்கிடையே, ஸ்டேஷன் எதிரே போலீஸ் குடியிருப்பில் சீருடையில் அவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. ராஜ்குமார் உடலை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.