/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மின்சாரம் தாக்கி சிக்ரி ஊழியர் பலி
/
மின்சாரம் தாக்கி சிக்ரி ஊழியர் பலி
ADDED : செப் 02, 2025 03:43 AM
தேவகோட்டை: தேவகோட்டை அருகே உஞ்சனையை சேர்ந்த செல்லையா மகன் ஜெய்சங்கர் 48., காரைக்குடி சிக்ரி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தற்போது வசித்து வரும் வீட்டின் அருகில் புதிய வீடு கட்டி வருகிறார். நேற்று புதிய வீட்டிற்கு மேல் கான்கிரீட் தளத்திற்கு குழாய் மூலம் ஜெய்சங்கர் தண்ணீர் விட்டுள்ளார். மோட்டார் இணைப்பில் பழுது ஏற்பட்டது. மின்சாரத்தை நிறுத்தாமல் மோட்டாரில் பழுது பார்த்துள்ளார் . மின்சாரம் ஜெய்சங்கர் உடலில் தாக்கியதில் இறந்தார். ஆறாவயல் போலீசார் விசாரிக்கின்றனர்.
பூட்டை உடைத்து 300 கிலோ பித்தளை திருட்டு
சிவகங்கை: காளையார்கோவில் அருகேயுள்ள அழகாபுரியை சேர்ந்தவர் தேனப்பன் 55. இவர் தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக அழகாபுரியில் ஒரு வீடு உள்ளது.
இந்த வீட்டில் ஆக.29 இரவு யாரோ பூட்டை உடைத்து உள்ளே சென்று வீட்டில் இருந்த 300 கிலோ பித்தளை பொருட்கள், காஸ் சிலிண்டர், பீரோவில் இருந்த ரூ.12 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர்.
தேனப்பனுக்கு அருகில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று முன் தினம் அழகாபுரிக்கு வந்த தேனப்பன் காளையார்கோவில் போலீசில் புகார் அளித்தார்.
கார் மோதி விவசாயி பலி
சிவகங்கை: காளையார்கோவில் அருகே இருப்பான்பூச்சி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சாமிநாதன் 40. இவர் இருப்பான்பூச்சி விலக்கு அருகே உள்ள தோட்டத்திற்கு நடந்து சென்றார். காளையார்கோவில் - பரமக்குடி ரோட்டில் ரோட்டை கடக்கும் போது அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் சாமிநாதன் இறந்தார். சாமிநாதன் மனைவி சரண்யா காளையார்கோவில் போலீசில் புகார் அளித்தார்.
பூட்டிய வீட்டில் நகை திருட்டு
திருப்புத்துார்: கல்லல் ஒன்றியம் நாச்சியாபுரத்தில் மகாலட்சுமி நகரில் வசிக்கும் ஜான்பிரிட்டோ மனைவி சாந்தா48. ஆசிரியையாக தனியார் பள்ளியில் வேலை பார்க்கிறார். ஆக.15ல் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டு மறுநாள் வந்த போது பூட்டிய வீட்டை உடைத்து நகைகள் திருடு போனது தெரிந்தது. நாச்சியாபுரம் போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் விழுப்புரம் செஞ்சியைச் சேர்ந்த முனிசாமி மகன் சிவசந்திரன்35, மதுரை கீழவளவைச் சேர்ந்த பாலையா மகன் கலையரசன்38 திருடியது தெரிந்தது. திருட்டு வழக்கில் சிறையில் இருந்த போது நண்பர்களாகி தொடர்ந்து திருடு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிந்தது.
இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 9 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.