/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி போக்குவரத்து நெரிசலில் மக்கள் தவிப்பு
/
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி போக்குவரத்து நெரிசலில் மக்கள் தவிப்பு
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி போக்குவரத்து நெரிசலில் மக்கள் தவிப்பு
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி போக்குவரத்து நெரிசலில் மக்கள் தவிப்பு
ADDED : ஏப் 09, 2025 07:35 AM
சிவகங்கை சிவகங்கை பஸ் ஸ்டாண்டின் ஒரு பகுதியில் கட்டுமானப்பணி நடந்து வருவதால் பஸ்கள் நிறுத்த இடமின்றி தினமும் மக்கள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.
திருப்புத்துார்,மதுரை செல்ல வேண்டிய பஸ்கள் தொண்டி செல்லும் ரோட்டோரத்தில் நிறுத்தப்படுகிறது.
திருப்புத்துார் செல்லும் பஸ்களை சில டிரைவர்கள் பஸ் ஸ்டாண்டின் முன்பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றுகின்றனர்.சில டிரைவர்கள் மேலுார் மானாமதுரை பஸ்கள் நிற்கும் இடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றுகின்றனர்.இதனால் மதகுபட்டி, திருப்புத்துார், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பஸ்கள் நிற்கும் இடம் தெரியாமல் அவதிப்படுகின்றனர்.
இரவு நேரத்தில் சென்னை செல்லும் ஆம்னி பஸ்களும் தற்போது மதுரை பஸ் நிற்கும் பகுதியான ரோட்டோரத்தில் நிறுத்தப்படுவதால் மதுரை செல்லும் பஸ்களில் பயணிகள் ஏறுவதில் சிரமம் ஏற்படுகிறது. இரவில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்த போலீசாரும் இல்லாததால் அவரவர்கள் விருப்பம் போல் வாகனங்களை இயக்குகின்றனர்.
பஸ் ஸ்டாண்டில் கட்டுமானப்பணி முடியும் வரை சென்னை செல்லும் தனியார் பஸ்களை வேறு பகுதியில் இருந்து இயக்க நடவடிக்கை வேண்டும். மேலும் நெருக்கடியை தவிர்க்க சீரமைக்கப்பட்ட பஸ்ஸ்டாண்டின் ஒரு பகுதியில் அனைத்து ஊர்களுக்கும் செல்லும் பஸ்களை நிறுத்தி குழப்பமின்றி இயக்க போக்குவரத்து கழக ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி முடியும் வரை காலை முதல் இரவு வரை போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

