/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விளக்கு எரியாமல் இருள் சூழ்ந்த சிவகங்கை கலெக்டர் அலுவலகம் மக்கள், ஊழியர்கள் அச்சம்
/
விளக்கு எரியாமல் இருள் சூழ்ந்த சிவகங்கை கலெக்டர் அலுவலகம் மக்கள், ஊழியர்கள் அச்சம்
விளக்கு எரியாமல் இருள் சூழ்ந்த சிவகங்கை கலெக்டர் அலுவலகம் மக்கள், ஊழியர்கள் அச்சம்
விளக்கு எரியாமல் இருள் சூழ்ந்த சிவகங்கை கலெக்டர் அலுவலகம் மக்கள், ஊழியர்கள் அச்சம்
ADDED : மே 27, 2025 12:56 AM

சிவகங்கை; சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இரவில் விளக்குகள் எரியாததால் அலுவலர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து சிவகங்கையை தலைமையிடமாக கொண்டு 1984ல் புதிய மாவட்டம் உருவாக்கினர். இங்கு 1985 முதல் கலெக்டர் அலுவலகம் செயல்பட துவங்கியது. பிற மாவட்டங்களில் இல்லாத அளவிற்கு ஒரே வளாகத்தில் அனைத்து துறை மாவட்ட அலுவலகங்களும் இடம் பெறும் வகையில் வட்ட வடிவில் ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலக கட்டடம் கட்டினர்.
குறிப்பாக ஒரே வளாகத்தில் கலெக்டர், எஸ்.பி., அலுவலகம், மாவட்ட கருவூலகம், மின்வாரியம், வணிக வரித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்படுகின்றன. கலெக்டர் அலுவலக வட்ட வடிவிலான கட்டடங்களை சுற்றியுள்ள ரோட்டில் காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அதே போன்று கலெக்டர் அலுவலகம், பிற மாவட்ட அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர், ஊழியர்கள் தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 7 :00 மணி வரை இந்த வழியாக செல்கின்றனர்.
இருளில் கலெக்டர் அலுவலக வளாகம்
குறிப்பாக திருப்புத்துார் ரோட்டில் இருந்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் ஆர்ச், எல்.ஐ.சி., அலுவலகம் அருகே ஆர்ச் அமைத்துள்ளனர்.
கலெக்டர் அலுவலக வளாக சுற்றுப்புற ரோடுகள் முழுவதும் தெருவிளக்கு வசதி செய்துள்ளனர். ஆனால், இரவில் ஆர்ச் முதல் கலெக்டர், எஸ்.பி., பொதுப்பணித்துறை, மின்வாரிய அலுவலகங்களை சுற்றியுள்ள ரோட்டில் இரவில் விளக்குகள் எரியாமல், இருள் சூழ்ந்து காணப்படுகிறது. ஒன்றிரண்டு தெருவிளக்குகள் எரிந்தாலும், அந்த வெளிச்சத்தையும் மரங்கள் மறைத்து விடுகின்றன.
இதனால், அரசு அலுவலர், ஊழியர்கள், மாலையில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் மின்விளக்கு வசதியின்றி அச்சத்தில் தவிக்கின்றனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் இரவு முழுவதும் விளக்குகள் எரிய கலெக்டர் ஆஷா அஜித் நடவடிக்கை எடுக்க வேண்டும்.