/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிளஸ் 2 வில் 96.71 சதவீத மாணவர்கள் தேர்ச்சி: சிவகங்கை மாவட்டம் மாநிலத்தில் 6வது இடம்

ADDED : மே 09, 2025 01:41 AM

சிவகங்கை: பிளஸ் 2 தேர்வில் சிவகங்கை மாவட்டத்தில் 96.71 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 6ம் இடம் பிடித்துள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் இத்தேர்வை 70 அரசுப்பள்ளிகள், 37 அரசு உதவி பெறும் பள்ளிகள், 55 மெட்ரிக் பள்ளிகள் உட்பட 162 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதினர்.
83 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வை 7ஆயிரத்து 160 மாணவர்கள்,8 ஆயிரத்து 740 மாணவிகள் உட்பட மொத்தம் 15 ஆயிரத்து 900 பேர் எழுதினர்.
இதில் மாணவர்கள் 6 ஆயிரத்து 858 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 95.78. மாணவிகள் 8 ஆயிரத்து 519 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 97.47. ஒட்டு மொத்தமாக 15 ஆயிரத்து 377 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாவட்ட தேர்ச்சி விகிதம் 96.71 சதவீதம்.
பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் 2015ம் ஆண்டு 11வது இடம்,2016ம் ஆண்டில் 8ம் இடம், 2017மற்றும் 2018ம் ஆண்டில் 6வது இடம், 2019ம் ஆண்டு 11வது இடம்,2020ம் ஆண்டு 7ஆம் இடம், 2022மற்றும் 2023ம் ஆண்டுகளில் 6வது இடம் பிடித்தது. 2024ம் ஆண்டு மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தது.
இந்த ஆண்டு மாநில அளவில் 6வது இடம் பிடித்துள்ளது, என்றார்.