/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
துணை மருத்துவ படிப்பு துவக்கப்படாத சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை
/
துணை மருத்துவ படிப்பு துவக்கப்படாத சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை
துணை மருத்துவ படிப்பு துவக்கப்படாத சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை
துணை மருத்துவ படிப்பு துவக்கப்படாத சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை
ADDED : ஜூலை 27, 2025 12:16 AM
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு துணை மருத்துவ படிப்புகள் எப்போது துவங்கப்படும் என கிராமப்புற மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி 2012ல் தொடங்கப்பட்டது.ஆண்டு தோறும் 100 மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. முதுகலையில் மகப்பேறு, அறுவை சிகிச்சை, மயக்கவியல், பொதுமருத்துவம், குழந்தைகள் நலம், அவசர சிகிச்சை உள்ளிட்ட 6 பிரிவுகளில் 23 பேர் படிக்கின்றனர்.
கூடுதலாக துணை மருத்துவ படிப்புகளான டிப்ளமோ ஆய்வக தொழில்நுட்பத்தில் 100 மாணவர்களும், கதிரி இயக்கவியல் மற்றும் கதிர்படத் தொழில்நுட்பம், அறுவை அரங்கம் மற்றும் மயக்கவியல் தொழில் நுட்பம் படிப்புகளில் தலா 10 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பொதுவாக 19 வகை துணை மருத்துவப் படிப்புகள் உள்ளது. ஆனால் சிவகங்கை மருத்துவ கல்லுாரியில் பி.எஸ்.சி., நர்சிங், இ.சி.ஜி., தொழில்நுட்பம், இருதய தொழில் நுட்பம், டயாலிசிஸ் தொழில் நுட்பம், (டி.பார்ம்) டிப்ளமோ மருந்தாக்கியல், சுவாசவியல் நோய் சிகிச்சை, விபத்து மற்றும் அவசர சிகிச்சை தொழில்நுட்பம் போன்ற முக்கிய துணை மருத்துவப் படிப்புகள் இல்லை.
அதேபோல் எலும்பு முறிவு சிகிச்சை, காது, மூக்கு தொண்டை, கண் மருத்துவம், ரேடியாலஜி, பயோ உயிரி வேதியியல், மைக்ரோ பயாலஜி, அனாடமி போன்ற நான் கிளீனிக்கல் உள்ளிட்ட முதுகலை படிப்பும் இல்லை.
மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை தொடங்கப்பட்டு 12 ஆண்டுகளை கடந்த நிலையில் பல துணை மருத்துவ படிப்பு இங்கு கொண்டு வரப்படவில்லை.
இந்த துணை மருத்துவ படிப்பு தொடங்கப்பட்டால் மருத்துவமனைக்கு போதிய பயிற்சி மாணவர்கள் கிடைப்பார்கள். மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்படாது.
மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் பயன்பெறவும் நோயாளிகளுக்கு போதிய மருத்துவ சிகிச்சை கிடைக்கவும் சிவகங்கை மருத்துவக் கல்லுாரியில் கூடுதல் துணை மருத்துவப் படிப்புகள் மற்றும் முதுகலை படிப்புகளை தொடங்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

