/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் ரூ.2.3 லட்சம் மோசடி
/
சிவகங்கையில் ரூ.2.3 லட்சம் மோசடி
ADDED : செப் 04, 2025 12:00 AM
சிவகங்கை:சிவகங்கை மாவட்ட இளைஞர்களிடம் ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக ரூ.2.3 லட்சம் மோசடி செய்தவர்களை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் 42 வயது இளைஞர். இவரது அலைபேசிக்கு வாட்ஸ் ஆப் குரூப்பில் பாங்க் லோகோவுடன் ஒரு செயலி இணைப்பு வந்துள்ளது. அதை அவர் பதிவிறக்கம் செய்தார். அத்துடன் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ. ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 208 ரூபாய் பணம் டெபிட் ஆகியுள்ளது. இதேபோல் காரைக்குடி அருகே செஞ்சை பகுதியை சேர்ந்தவர் 27 வயது இளைஞர். அவரது அலைபேசிக்கு வாட்ஸ் ஆப்பில் வாகனத்திற்கு ரூ.1000 அபராதம் விதித்துள்ளதாக ஒரு இணைப்பு வந்துள்ளது. அந்த 27 வயது இளைஞர் பதிவிறக்கம் செய்தார். அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.85 ஆயிரம் மற்றொரு கணக்கிற்கு சென்றது.
காரைக்குடி பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞர் ஆன்லைனில் வேலை தேடியுள்ளார். அவருக்கு ஒரு வாட்ஸ் ஆப் எண்ணிலிருந்து குறுஞ்செய்தி வந்தது. அதன் பிறகு டெலிகிராமில் இருந்து ஆன்லைனில் பணம் முதலீடு செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஒருவர் பேசி நம்ப வைத்தார். அவர் பேசியதை நம்பிய அந்த இளைஞர் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.43 ஆயிரம் செலுத்தினார். பணத்தை பெற்ற அந்த நபரை அதன்பின் தொடர்பு கொள்ள முடியவில்லை.
மூவரும் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.