/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் இருவேறு கொலை ஒரே கும்பல் கைவரிசையா?
/
சிவகங்கையில் இருவேறு கொலை ஒரே கும்பல் கைவரிசையா?
ADDED : நவ 02, 2024 02:37 AM

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், களத்துாரை சேர்ந்த சிங்கம் மனைவி லட்சுமி, 60. இவர்களது மகன் ஜெயபாண்டி, 40. சில நாட்களுக்கு முன் மலேஷியா சென்றார். லட்சுமியும், ஜெயபாண்டி மனைவி நிரோஷாவும் களத்துார் வீட்டில் வசித்தனர்.
தீபாவளிக்காக நிரோஷா, திருப்புவனம் அருகே ஆவரங்காட்டில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் லட்சுமி தனியாக இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு லட்சுமி வீட்டிற்கு வந்த கும்பல், அவரது கழுத்தை அறுத்து கொலை செய்து தப்பியது. சிவகங்கை தாலுகா போலீசார் விசாரணையில், மலேஷியாவில் உள்ள ஜெயபாண்டிக்கு, ஒருவர் போனில் மிரட்டல் விடுத்துள்ளார். அவர் தான், லட்சுமியை கொலை செய்திருக்கக் கூடும் என, போலீசார் கருதுகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு கீழவாணியங்குடி கண்மாய் கரையில் அமர்ந்திருந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன், 40, என்பவரை வாள்களுடன் இரண்டு டூ - வீலரில் வந்த 6 பேர் வெட்டிவிட்டு தப்பினர்.
சம்பவ இடத்திலேயே மணிகண்டன் பலியானார். சிவகங்கை போலீசார் விசாரிக்கின்றனர். இவ்விரு கொலை சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.