/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை லோக்சபா தொகுதி உதவி தேர்தல் அலுவலர்கள்
/
சிவகங்கை லோக்சபா தொகுதி உதவி தேர்தல் அலுவலர்கள்
ADDED : மார் 19, 2024 05:35 AM
சிவகங்கை : சிவகங்கை லோக்சபா தொகுதிக்கான உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இத்தொகுதியில் சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்துார், மானாமதுரை, ஆலங்குடி, திருமயம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளில் உள்ள 1,873 ஓட்டுச்சாவடிகளில் ஏப்., 19 ல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. தொகுதியில் 16 லட்சத்து 23 ஆயிரத்து 408 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.
லோக்சபா தேர்தல் தொடர்பாக வேட்பாளர், கட்சியினர், வாக்காளர்கள் விபரங்களை கேட்டு தெரிந்து கொள்ள சட்டசபை தொகுதி வாரியாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சட்டசபை பெயர் அலைபேசி எண் தொகுதி
சிவகங்கை விஜயகுமார் 94450 00471
மானாமதுரை ஜெயமணி 94454 77845
திருப்புத்துார் சரவண பெருமாள் 98425 96430
காரைக்குடி பால்துரை 94450 00470
திருமயம் வில்சன் 94450 74590
ஆலங்குடி சாந்தி 94450 00311

