/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை நகராட்சி சந்தை, பஸ் ஸ்டாண்ட் பணி: காலம் கடந்தும் பணியை முடிக்காததால் அவதி
/
சிவகங்கை நகராட்சி சந்தை, பஸ் ஸ்டாண்ட் பணி: காலம் கடந்தும் பணியை முடிக்காததால் அவதி
சிவகங்கை நகராட்சி சந்தை, பஸ் ஸ்டாண்ட் பணி: காலம் கடந்தும் பணியை முடிக்காததால் அவதி
சிவகங்கை நகராட்சி சந்தை, பஸ் ஸ்டாண்ட் பணி: காலம் கடந்தும் பணியை முடிக்காததால் அவதி
ADDED : ஆக 08, 2024 04:43 AM

சிவகங்கை நகராட்சியில் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க கட்டுமான பணி, வாரச்சந்தை புதுப்பித்தல் பணி, நேருபஜாரிலுள்ள தினசரி சந்தை கட்டுமான பணி நகர்ப்புற மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து நடந்து வருகிறது.
2022-23ம் ஆண்டு நகர்ப்புற மேம்பாட்டு திட்ட நிதி ரூபாய் 3 கோடியே 89 லட்சம் செலவில் வாரச்சந்தை கட்டுமான பணி துவங்கியது. இங்கு 152 காய்கறி கடைகளும், 12 மீன் கடைகளும் கட்ட திட்டமிடப்பட்டது.
தற்போது பாதிக்கும் மேற்பட்ட பணி முடிவடைந்த நிலையில், தரை தளத்தில் பேவர் பிளாக் பதிக்கும் பணி, நடைபாதை அமைக்கும் பணி நிறைவேறாமல் உள்ளது. பணி காலம் ஒரு வருடத்திற்குள் முடிக்க வேண்டும்.
ஆனால் தற்போது வரை பணியை முடிக்காததால் புதன்தோறும் நெருக்கடிமிகுந்த தாலுகா அலுவலக ரோட்டில் சந்தை நடக்கிறது.
சந்தை ஒப்பந்ததாரர் வெள்ளைச்சாமி கூறுகையில், தரை தளத்தில் பேவர் பிளாக் பதிக்கவேண்டியுள்ளது. ஆக.15க்குள் கட்டுமானப் பணியை முடித்து நகாரட்சியிடம் சந்தை கட்டடத்தை ஒப்படைத்து விடுவோம் என்றார்.
நேரு பஜார் தினசரி சந்தை
நேரு பஜாரில் உள்ள தினசரி சந்தை ரூபாய் 3 கோடியே 99 லட்சம் மதிப்பீட்டில் கட்டுமான பணிக்கு திட்டமிடப்பட்டது. இங்கும் 100 கடைகள், சைக்கிள் ஸ்டாண்ட், கேன்டீன், பாதுகாவலர் அறை, பொதுக்கழிப்பறை, பேவர் பிளாக் தரைத்தளம் அமைய உள்ளது. இந்த பணியை 9 மாதத்தில் முடிக்க வேண்டும். தற்போது 80 சதவீத பணியை முடித்துள்ளனர். மீதமுள்ள 20 சதவீத பணி நடந்து வருகிறது.
பஸ் ஸ்டாண்ட் பணி மந்தம்
நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022--23 நிதி ரூபாய் ஒரு கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் 18 கடைகள், பொதுக்கழிப்பறை, பஸ் ஸ்டாண்ட் தரைத்தளம், முகப்பு பகுதியில் ஆர்ச் உள்ளிட்ட பஸ் ஸ்டாண்ட் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. 6 மாதத்தில் முடிக்க வேண்டிய இந்த பணி கடந்த இரண்டு ஆண்டாக நடக்கிறது.
பஸ் ஸ்டாண்ட் முழுவதும் துாசியாகவே காணப்படுகிறது. மழை பெய்தால் சேரும் சகதியுமாக மாறிவிடுகிறது. பஸ் ஸ்டாண்டில் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
கமிஷனர் கிருஷ்ணாராம் கூறுகையில், வாரச்சந்தை ஒப்பந்ததாரர் பணியை ஏப். மாதமே முடிக்க வேண்டும். ஆனால் இதுவரை முடிக்கவில்லை. அவர் ஆக.15க்குள் கட்டுமானப் பணியை முடித்து கட்டடத்தை நகராட்சியிடம் ஒப்படைக்கவேண்டும்.
பஸ் ஸ்டாண்ட் ஒப்பந்ததாரரும் கட்டுமானப் பணியை செப்.5க்குள் முடிக்க வேண்டும். அவருக்கும் ஒப்பந்த காலம் முடிந்தததால் ஒப்பந்த தொகையில் ஒரு சதவீதம் அபராதம் விதித்துஉள்ளோம்.
தினசரி சந்தை கட்டுமான பணிக்கு ஒப்பந்த காலம் உள்ளது. அங்கு பணி நடைபெற்று வருகிறது என்றார்.