/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிறு, குறுந்தொழில் கடனுதவி; மாவட்ட தொழில் மையம் அனுமதி
/
சிறு, குறுந்தொழில் கடனுதவி; மாவட்ட தொழில் மையம் அனுமதி
சிறு, குறுந்தொழில் கடனுதவி; மாவட்ட தொழில் மையம் அனுமதி
சிறு, குறுந்தொழில் கடனுதவி; மாவட்ட தொழில் மையம் அனுமதி
ADDED : ஜூலை 31, 2025 10:53 PM
சிவகங்கை; சிவகங்கை மாவட்டத்தில் சிறு, குறு தொழில்களுக்கு 259 பயனாளிக்கு ரூ.3.65 கோடிக்கு கடன் அனுமதியை மாவட்ட தொழில் மையம் வழங்கியுள்ளது.
சிவகங்கை மாவட்ட தொழில் மையம் சார்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை உருவாக்கும் திட்டம், நீட்ஸ் திட்டம், பிரதமரின் வேலை உருவாக்கும் திட்டம், அம்பேத்கர் தொழில் முன்னோடிகள், பிரதமரின் உணவு பதப்படுத்துதல் தொழில்களுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி வழங்க பரிந்துரை செய்யப்படுகிறது.
கட்டட வேலை, மர வேலை, பாரம்பரிய ஜவுளி அச்சிடுதல், தோல் கைவினை பொருள் தயாரிப்பு, மீன்வலை தயாரிப்பு, நகை செய்தல், பியூட்டீசன், பூட்டு தயாரிப்பு, தையல், கூடைமுடைதல், கயிறு, பாய் பின்னுதல், மண்பாண்டம் தயாரிப்பு, சிற்ப வேலைப்பாடு உட்பட 25 விதமான தொழில்களுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்படும்.
இக்கடனுதவிக்கு அதிகபட்சம் (25 சதவீதம்) ரூ.50,000 வரை தள்ளுபடி உண்டு. அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரை கடனுதவி, வட்டி மானியம் 5 சதவீதம் வரை வழங்கப்படும்.
இக்கடன் பெற வயது 35க்கு மேல் இருத்தல் வேண்டும். மாநில அளவில் 8,951 தொழில் முனைவோருக்கு ரூ.170 கோடிக்கு கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் மானியமாக ரூ.34 கோடி வரை அனுமதித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்ட அளவில் தொழில் மையம் மூலம் 259 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 65 லட்சத்து 45 ஆயிரத்திற்கு கடன் அனுமதியும், ரூ.53.60 லட்சம் மானியமும் அளித்துள்ளனர்.