UPDATED : அக் 29, 2026 11:27 PM
ADDED : அக் 29, 2026 10:45 PM

அ நிறம் | அளவு
திருப்புத்துார்: திருப்புத்துாரில் இன்று (அக்.,29) காலை பனி மூட்டத்தால் ரோடுகளில் வாகன போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டது.
திருப்புத்துாரில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மழையை எதிர்பார்த்த மக்களுக்கு இன்று அதிகாலை முதல் பனிமூட்டம் தான் காணப்பட்டது. ரோடு முழுவதும் புகையாக அடர்ந்து பனி இறங்கியது. இதனால் ரோடுகளில் தொலைவில் வாகன நடமாட்டம் தெரிவது சிரமமாக இருந்தது. மேலும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. காலை 8:00 மணி வரை இந்தபனி மூட்டம் காணப்பட்டது. பிறகு வெயில் அதிகரிக்க, அதிகரிக்க பனி முற்றிலுமாக நீங்கியது. பனி விழத்துவங்கியுள்ளதால் இனி மழை பெய்வது குறையும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
