/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையிலிருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்
/
மானாமதுரையிலிருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்
ADDED : பிப் 15, 2024 02:51 AM

மானாமதுரை:மானாமதுரையிலிருந்து அயோத்திக்கு நேற்று 20 பெட்டிகளுடன் சிறப்பு ரயில் புறப்பட்டது. 350க்கும் மேற்பட்ட பக்தர்கள் பரவசமாக பயணம் மேற்கொண்டனர்.
உ.பி., மாநிலம் அயோத்தியில் ஜன., 22ல் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதனைத் தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் ராமர் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சென்று வருகின்றனர். நாடு முழுவதுமிருந்து சலுகை கட்டணத்தில் ஐ.ஆர்.சி.டி.சி., மூலம் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலிருந்து நேற்று இரவு 9:45 மணிக்கு சிறப்பு ரயில் 20 பெட்டிகளுடன் அயோத்திக்கு புறப்பட்டு சென்றது. மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீ வத்ஸவா, சிவகங்கை மாவட்ட பா.ஜ., தலைவர் சத்தியநாதன் உள்ளிட்டோர் ரயிலை வழியனுப்பி வைத்தனர்.
நேற்று புறப்பட்ட இந்த ரயில் மானாமதுரையிலிருந்து மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், பெரம்பலூர் வழியாக அயோத்திக்கு சனிக்கிழமை மதியம் 12:50 மணிக்கு சென்றடையும்.
அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு கிளம்பி பிப்.21ல் மானாமதுரை வந்தடையும். பயணிகளுக்கு உணவு, தங்குமிடம், ராமர் கோயிலில் தரிசனம் உள்ளிட்டவற்றை ஐ.ஆர்.சி.டி.சி., செய்து கொடுக்கிறது.
மானாமதுரையிலிருந்து 350 க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷம் எழுப்பி மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றனர்.

