/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி
/
கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி
ADDED : ஏப் 24, 2025 07:01 AM
சிவகங்கை: செம்மொழி நாளை முன்னிட்டு பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டி நடைபெறும் என சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தமிழ் வளர்ச்சி துறை சார்பில் செம்மொழி நாள் விழா கொண்டாடப்படுகிறது.இதனையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 9 ம் தேதி, கல்லுாரி மாணவர்களுக்கு மே 10 ம் தேதி கட்டுரை, பேச்சு போட்டிகள் சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு பள்ளி வளாக கல்வித்துறை கூட்டரங்கில் போட்டிகள் நடைபெறும். இதில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்ப படிவத்தை ''https://tamilvalarchithurai.tn.gov.in.'' என்ற தமிழ் வளர்ச்சித்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சிவகங்கை கலெக்டர் அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஏப்., 30க்குள் ஒப்படைக்க வேண்டும். இப்போட்டிகளில் அனைத்து பள்ளி, கல்லுாரி மாணவர்களும் பங்கேற்கலாம். போட்டிக்கான தலைப்பு அன்று காலை 9:30 மணிக்கு அறிவிக்கப்படும். மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு, மே 17 ம் தேதி சென்னையில் மாநில அளவிலான போட்டி நடைபெறும்.
மாநில அளவில் முதல் 3 இடங்களை பெறும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ஜூன் 3 ம் தேதி சென்னையில் நடக்கும் செம்மொழி நாள் விழாவில் பரிசு, சான்று வழங்கப்படும். மாவட்ட அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000ம் வழங்கப்படும். மாநில அளவில் முதலிடம் பிடித்தால் ரூ.15,000, இரண்டாம் பரிசுக்கு ரூ.10,000, மூன்றாம் பரிசு ரூ.7,000 வழங்கப்படும், என்றார்.