/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பல ஆண்டாக கிடப்பில் உள்ள ஸ்ரீராம் நகர் மேம்பால பணி
/
பல ஆண்டாக கிடப்பில் உள்ள ஸ்ரீராம் நகர் மேம்பால பணி
பல ஆண்டாக கிடப்பில் உள்ள ஸ்ரீராம் நகர் மேம்பால பணி
பல ஆண்டாக கிடப்பில் உள்ள ஸ்ரீராம் நகர் மேம்பால பணி
ADDED : நவ 01, 2024 05:00 AM
காரைக்குடி: காரைக்குடி அருகே ஸ்ரீராம்நகர் ரயில்வே கேட்டின் மேல் மேம்பாலம் கட்டும் பணி பல ஆண்டாக கிடப்பில் உள்ளதால், கேட் அடைக்கப்படும் போது, வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
காரைக்குடி மாநகராட்சியின் கீழ் உள்ள ஸ்ரீராம் நகர் பகுதி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் அதிகளவில் உள்ள பகுதியாகும். காரைக்குடி - - அறந்தாங்கிரோட்டில் ஸ்ரீராம் நகரில் ரயில்வே கேட் உள்ளது. இதன்வழியே சென்னைக்கு ஏராளமான ரயில்கள் சென்று வருகின்றன.
அழகப்பா பல்கலை., உடற்கல்வியியல் கல்லூரி உட்பட பல்வேறு கல்லூரிகளை ஒட்டி இந்நகர் உள்ளது. இங்கு ஏராளமான போட்டி தேர்வு பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. இங்கு மாணவர்களின் வசதிக்காக ஏராளமான தனியார் விடுதிகளும் செயல்படுகின்றன.
பள்ளத்தூர், கண்டனூர், புதுவயல் பகுதிக்கு பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து தினமும் நெல் மற்றும் அரிசி ஏற்றிச் செல்லும் லாரிகள் அதிகம் வந்து செல்கின்றன. அறந்தாங்கி செல்லும் முக்கிய சாலையாக உள்ளதால் அதிக பஸ்கள் சென்று வருகின்றன.
ரயில்கள் வரும் நேரத்தில் கேட்கள் மூடப்பட்டால், குறைந்தது 30 முதல் 40 நிமிடம் வரை நீண்டவரிசையில் பஸ்கள்,அரிசி, நெல் மூடை லாரிகள் காத்திருக்கின்றன.எனவே ஸ்ரீராம்நகர் ரயில்வே கேட்டின் மேல் மேம்பாலம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால், அரசு இது குறித்து எந்தநடவடிக்கையும் எடுக்காததால், வாகன நெரிசலில் மக்கள் தவித்து வருகின்றனர்.

