/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
'‛உங்களுடன் ஸ்டாலின்' முகாம் புறக்கணிப்பு வருவாய்த்துறையினருக்கு சம்பளம் 'கட்'

ADDED : செப் 26, 2025 10:55 PM
சிவகங்கை:'உங்களுடன் ஸ்டாலின் முகாமை' புறக்கணித்த வருவாய்த்துறை அலுவலர் சங்க ஊழியர்களுக்கு 'நோ ஒர்க், நோ பே' என்ற அடிப்படையில் சம்பளம், இதர படி வழங்க இயலாது என வருவாய் நிர்வாக ஆணையர் சாய்குமார் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில், உங்களுடன் ஸ்டாலின் முகாம் திட்டத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். மனுக்கான தீர்வு நாட்களை 90 ஆக உயர்த்த வேண்டும்.
முகாம் செலவின தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இச்சங்கத்தினர் செப்., 3 மற்றும் 4 ஆகிய இரு நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
செப்., 25 முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாமை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே 'நோ ஒர்க், நோ பே' என்ற அடிப்படையில் பணி செய்யாத இந்நாட்களில் சம்பளம் மற்றும் இதர படிகள் வழங்க இயலாது என அரசு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த விபரங்களை கலெக்டர்கள் சேகரித்து, அறிக்கை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பணியை புறக்கணித்த ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.