/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரயில்வே ஸ்டேஷனில் காட்சிப்பொருளாக ஸ்டால்
/
ரயில்வே ஸ்டேஷனில் காட்சிப்பொருளாக ஸ்டால்
ADDED : ஏப் 05, 2025 05:44 AM

மானாமதுரை: மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் 'ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு' திட்டத்தில் வைக்கப்பட்ட விற்பனை அரங்க பெட்டி ஓராண்டாக காட்சி பொருளாக உள்ளதென புகார் தெரிவிக்கின்றனர்.
அந்தந்த பகுதியில் பிரசித்தி பெற்ற பொருட்களை விற்பனை செய்து, நெசவாளர், கைவினை கலைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ரயில்வே ஸ்டேஷன்களில் ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
அந்த வகையில் மானாமதுரையில் புவிசார் குறியீடு பெற்ற மண்பாண்ட பொருட்கள் விற்பனை செய்ய ஸ்டால் அமைத்தனர். ஆனால், ஸ்டால் அமைத்து ஓராண்டு ஆன நிலையில் அங்கு எந்தவித பொருட்களும் விற்கப்படாமல், பூட்டியே கிடக்கிறது. இதனால் பயணிகள் மண்பாண்ட பொருட்களை வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

