/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாவட்ட கேரம் போட்டி மாணவர்கள் பங்கேற்கலாம்
/
மாவட்ட கேரம் போட்டி மாணவர்கள் பங்கேற்கலாம்
ADDED : ஜூலை 16, 2025 11:38 PM
சிவகங்கை: காளையார்கோவிலில் மாவட்ட கேரம், பாரதி கேரம் கழகத்தாரால் ஜூலை 19 ல் நடத்தப்பட உள்ளதாக கேரம் கழக மாவட்ட செயலாளர் அபுதாகீர் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: இப்போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் மட்டுமே பங்கேற்க முடியும். ஒவ்வொரு பிரிவிலும் 32 பேர் மட்டுமே பங்கேற்கலாம். இப்போட்டிகளில் பங்கேற்க ஜூலை 18 இரவு 8:00 மணி வரை முன்பதிவு செய்யலாம். போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் பள்ளியின் ஒப்புதல் சான்று, பிறப்பு சான்றுடன் வர வேண்டும். 12, 14 மற்றும் 18 வயதினருக்கென ஒற்றையர், இரட்டையர் போட்டி நடைபெறும். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசு தொகை, சான்று, பதக்கம் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்க 93614 09044 என்ற எண்ணில் பதிவு செய்யலாம், என்றார்.