/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பல்லாங்குழியான ரோடு மாணவர்கள் அவதி
/
பல்லாங்குழியான ரோடு மாணவர்கள் அவதி
ADDED : டிச 11, 2025 05:45 AM

சிவகங்கை: சிவகங்கை அருகே பனங்காடியில் இருந்து மதுரை தொண்டி ரோட்டிற்கு செல்லும் தார்சாலை பல்லாங்குழியாக காட்சியளிப்பதால் டூவீலரில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சூழல் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை அருகே உள்ளது பனங்காடி கிராமம். இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாணவர்கள் அருகில் உள்ள நாட்டரசன்கோட்டை அரசு மேல் நிலை பள்ளியிலும், சிவகங்கையிலுள்ள பள்ளி, கல்லுாரிகளிலும் படித்து வருகின்றனர். பனங்காடியில் இருந்து நாட்டரசன்கோட்டைக்கு 2 கிலோ மீட்டர் துாரம் தார் சாலை உள்ளது. இந்த சாலை மதுரை தொண்டி சாலையை இணைக்கும் வகையில் உள்ளது. இந்த சாலை முழுவதும் சேதமடைந்து பல்லாங்குழியாக காட்சி அளிக்கிறது.
மழை பெய்தால் பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. டூவீலர் சைக்கிளில் செல்பவர்கள் விபத்தில் சிக்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

