ADDED : பிப் 20, 2024 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, - -சாத்தரசன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய சுகாதார திட்டங்களின் மதிப்பீடு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
மத்திய அரசின் தேசிய தர நிர்ணய சான்றுக்கான ஆய்விற்காக சாத்தரசன்கோட்டையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணிகள், பதிவேடுகள் மற்றும் நிலையத்தில் உள்ள அடிப்படை கட்டமைப்பு ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வினை தேசிய சுகாதார திட்டங்களின் மதிப்பீடு அலுவலர்கள் உன்னி கிருஷ்ணன், மிருணாளினி செய்தனர்.
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் விஜய்சந்திரன் உடன் இருந்தார்.
ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் ராகவேந்திரன், நிலைய மருத்துவ அலுவலர்கள் தென்றல், வெங்கடேச பிரசன்னா செய்தனர்.

