/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எஸ்.புதுாரில் தீயணைப்பு நிலையம் இல்லாமல் அவதி! 30 கி.மீ., துாரத்தில் இருந்து வரும் வாகனங்கள்
/
எஸ்.புதுாரில் தீயணைப்பு நிலையம் இல்லாமல் அவதி! 30 கி.மீ., துாரத்தில் இருந்து வரும் வாகனங்கள்
எஸ்.புதுாரில் தீயணைப்பு நிலையம் இல்லாமல் அவதி! 30 கி.மீ., துாரத்தில் இருந்து வரும் வாகனங்கள்
எஸ்.புதுாரில் தீயணைப்பு நிலையம் இல்லாமல் அவதி! 30 கி.மீ., துாரத்தில் இருந்து வரும் வாகனங்கள்
ADDED : ஏப் 12, 2024 10:48 PM
இம்மாவட்டத்தில் மலை சார்ந்த ஒன்றியமான இப்பகுதியில் பல கிராமங்கள் மலைச்சரிவுகளில் அமைந்துள்ளது. முழுக்க விவசாயத்தையே இப்பகுதி மக்கள் நம்பி வாழ்ந்து வரும் நிலையில் பலரது வீடுகள் ஓட்டு வீடுகளாகவும், குடிசைகளாகவும் உள்ளன.
இப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டாலோ, யாரேனும் கிணறு, மலைச்சரிவுகளில் இருந்து விழுந்து காயமடைந்தாலோ மீட்பதற்குதீயணைப்பு மீட்பு வாகனம் வர தாமதமாகி விடுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி, மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தான் தீயணைப்பு வாகனங்கள் வர வேண்டியுள்ளது.
எனவே இவ்வொன்றியத்திற்கு தீயணைப்பு நிலையம் கொண்டுவர இப்பகுதி மக்கள் பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. கோடைகாலங்களில் சுற்றுவட்டார மலைத்தொடர்களில் அடிக்கடி காட்டுத்தீ ஏற்படும் சூழலில் இப்பகுதிக்கு தீயணைப்பு நிலையம் அத்தியாவசியமாகிறது.
ராஜா, செட்டிகுறிச்சி: கிணறுகள், குடிசைகள், மலைகள் அதிகம் உள்ள இவ்வொன்றியத்தில் தீ விபத்து ஏற்படும் போதும், யாரேனும் கிணறுகளில் தவறி விழும்போதும் தீயணைப்பு வாகனங்கள் 30 கி.மீ., தூரத்திற்கு அப்பால் இருந்து வர வேண்டி உள்ளது.
அதுவும் பல இடங்களில் அலைபேசி சிக்னல் கிடைக்காததால் தீயணைப்பு நிலையத்தை தொடர்பு கொள்வதற்கும் சிரமமாகி விடுகிறது. இங்கு தீயணைப்பு நிலையம் அமைக்க பலமுறை வலியுறுத்தியும் யாரும் கண்டுகொள்ளவில்லை. தேர்தலின் போது மட்டும் வேட்பாளர்கள் உறுதி சொல்லி செல்வது தொடர்கிறது. ஆனால் ஓட்டு வாங்கி சென்றதும்யாரும் நடவடிக்கை எடுத்ததில்லை.
இனியாவது இங்கு தீயணைப்பு நிலையம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

