/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாலைக்கிராமத்தில் தற்கொலை: மர்மம் இருப்பதாக கூறி மறியல்
/
சாலைக்கிராமத்தில் தற்கொலை: மர்மம் இருப்பதாக கூறி மறியல்
சாலைக்கிராமத்தில் தற்கொலை: மர்மம் இருப்பதாக கூறி மறியல்
சாலைக்கிராமத்தில் தற்கொலை: மர்மம் இருப்பதாக கூறி மறியல்
ADDED : நவ 02, 2024 08:18 AM

சாலைக்கிராமம் : இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் குடும்ப பிரச்னை காரணமாக ஒருவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி வி.சி.க.,வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கீழத்தெரு ஆலம்பட்டியைச் சேர்ந்த கணேஷ் மகன் சரவணக்குமார் 32,இவரும் வடக்கு சாலைக் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் மகள் சிந்துஜா 26, என்பவரும் இருவரும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
தங்களது பெண் குழந்தை தர்ஷிகாவோடு திருமங்கலத்தில் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
சிந்துஜா தனது குழந்தையோடு கணவரை பிரிந்து அவரது தந்தை ஊரான வடக்குசாலை கிராமத்தில் குடியிருந்து வந்தார். அக்.30ம் தேதி சரவணகுமார் தனது மனைவியையும், குழந்தையையும் பார்ப்பதற்காக வடக்கு சாலைக்கிராமத்திற்கு அவரது மனைவி வீட்டுக்கு வந்த நிலையில் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அக். 31ஆம் தேதி சரவணகுமார் தனது மனைவியின் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சாலைக் கிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் நேற்று அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி சிவகங்கை அம்பேத்கர் சிலை அருகே வி.சி.க., மாவட்ட செயலாளர் வக்கீல் பாலையா தலைமையில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் சிவகங்கை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

