/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் அதிகரிக்கும் தற்கொலை
/
திருப்புத்துாரில் அதிகரிக்கும் தற்கொலை
ADDED : ஜூன் 26, 2025 10:34 PM
திருப்புத்துார்; திருப்புத்துார் பகுதியில் அண்மை காலமாக தற்கொலை மரணங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
திருப்புத்துார் நகர், கண்டவராயன்பட்டி, நாச்சியாபுரம் போலீஸ் ஸ்டேஷன் சார்ந்த விபத்து மற்றும் தற்கொலை உள்ளிட்ட வழக்குகளில் இறந்தவர்களின் சடலங்கள் திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் உடற் கூறு பரிசோதனை நடைபெறும். இந்த ஆண்டு முதல் 6 மாதத்திற்குள் இந்த வழக்குகளில் 44 பேர் இறந்துள்ளது தெரிய வந்துள்ளது. அதில் தற்கொலையால் மட்டும் 23 பேர் இறந்துள்ளனர். அதில் 18 பேர் தூக்கிட்டும், 5 பேர் விஷம் குடித்தும் இறந்துள்ளனர். குறிப்பாக கடந்த இரு வாரங்களில் மட்டும் 7 பேர் தற்கொலையில் இறந்துள்ளனர்.
கடந்த ஆண்டில் மட்டும் இந்த வழக்குகள் சம்பந்தப்பட்ட 88 பேர் இறந்தனர். இதனால் இந்த ஆண்டு புள்ளி விபரம் மேலும் அதிகரிக்குமோ என்ற அச்சத்தில் பலரும் உள்ளனர்.தற்கொலை செய்யும் எண்ணம் உள்ளவர்கள் அதை தவிர்க்க உதவும் கவுன்சிலிங்' எளிதாக கிடைப்பதில்லை. அதே போன்று சாலையில் போக்குவரத்து விதிகளை மீறலும், போதையில் வாகனம் ஓட்டுவதும் விபத்துக்களில் பலியை அதிகரித்துள்ளது. பொதுமக்களிடையே இவற்றில் விழிப்புணர்வு ஏற்பட்டாலே இது போன்ற இறப்பு குறையும்.