/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் கோடை நெல் சாகுபடி
/
திருப்புத்துாரில் கோடை நெல் சாகுபடி
ADDED : மார் 22, 2025 05:02 AM
திருப்புத்துார்: திருப்புத்துாரில் விவசாயிகள் கோடை மழையை எதிர்பார்த்து கோடை நெல்சாகுபடியைதுவங்கியுள்ளனர்.
திருப்புத்துார் வட்டாரம் வானம் பார்த்த பூமி என்பதால் ஒரு போக விவசாயம் நடைபெறுவதே அரிதானது. அதிலும் கிணறு,ஆழ்குழாய் வசதி உள்ளவர்களே ஆடிப்பட்டத்திற்கு நாற்றங்காலில் விதைப்பதுண்டு.
மற்ற விவசாயிகள் மழை பெய்வதைப் பார்த்து தாமதமாகவே நேரடியாக விதைப்பது, நாற்று நடுவது என்று நெல்சாகுபடி செய்கின்றனர்.
இந்த ஆண்டு பல முறை மழை பெய்ததால்கண்மாய்களில் தற்போதும் சிறிதளவு நீர் உள்ளது. கால்நடைகளின் தாகத்தை ஓரளவு தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இந்த நீரை நம்பியும், கிணறு பாசனம் செய்யும் சில விவசாயிகள் நெல் சாகுபடியை இரண்டாம் போகமாக துவக்கியுள்ளனர். இதனால் கோடையிலும் திருப்புத்துாரில் நெல்சாகுபடி அதிகரித்து வருவதாக வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.