/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு இசைபள்ளியில் கோடை கால பயிற்சி
/
அரசு இசைபள்ளியில் கோடை கால பயிற்சி
ADDED : மே 07, 2025 02:09 AM
சிவகங்கை: சிவகங்கை அரசு இசைப்பள்ளியில் வயது 6 முதல் 16க்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பாட்டு, பரதம், நடனம், ஓவிய பயிற்சி வழங்கப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, பாட்டு, பரதம், கிராமிய நடனம், ஓவியம் ஆகிய கலைகளில் மாணவர்களுக்கு சனியன்று மாலை 4:00 முதல் 6:00 மணி வரையிலும், ஞாயிறன்று காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது.
இது தவிர கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கலைத்திறனை வளர்க்க அரசு இசைப்பள்ளியில் மே 6 முதல் 25 ம் தேதி வரை காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பாட்டு, பரதம், கிராமிய நடனம், ஓவியம் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி முடிவில் மாணவர்களுக்கு சான்று வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 97863 41558ல் தொடர்பு கொள்ளலாம், என்றார்.

