ADDED : ஆக 26, 2025 11:58 PM
சிவகங்கை; சிவகங்கையில் தோட்டக்கலைத்துறை மூலம் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வேளாண் கருவி வழங்குதல்,முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி துவக்க விழா நடந்தது.
கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சத்தியா வரவேற்றார். அமைச்சர் பெரியகருப்பன், 32 விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ரூ.70 லட்சம் மதிப்பிலான வேளாண் கருவிகள் வழங்கினார்.
மாவட்ட விளையாட்டு அரங்கில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளை அமைச்சர் துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன் வரவேற்றார். விழாவில் கால்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை அமைச்சர் துவக்கி வைத்தார். விழாவில் எம்.எல்.ஏ., தமிழரசி, கோட்டாட்சியர் விஜயகுமார்,தோட்டக்கலை உதவி இயக்குனர் தர்மர், சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி டீன் சீனிவாசன்,நிலைய மருத்துவ அலுவலர் முகமது ரபிக், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன்,சிவகங்கை நகராட்சி தலைவர் துரைஆனந்த், கவுன்சிலர்கள் ஜெயகாந்தன்,அயூப்கான் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.