/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் நீச்சல் போட்டி: மாணவ, மாணவிகள் சாதனை
/
சிவகங்கையில் நீச்சல் போட்டி: மாணவ, மாணவிகள் சாதனை
ADDED : ஜன 14, 2025 10:22 PM

சிவகங்கை:
சிவகங்கையில் நடந்த மூன்று மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் சிவகங்கை ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட மாணவர்களுக்கான நீச்சல் போட்டி நடந்தது. வயது 6 முதல் 25 வரையில் 8 பிரிவுகளில் 146 போட்டிகள் இரு பாலருக்கும் தனித்தனியாக நடத்தப்பட்டது. இதில், மூன்று மாவட்டங்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இப்போட்டியில் சிவகங்கை மாவட்ட மாணவர்கள் ஒட்டு மொத்த அளவில் முதலிடமும், விருதுநகர் 2ம் இடமும், ராமநாதபுரம் 3ம் இடமும் பெற்றது. தனி நபர் பிரிவு போட்டியில் சிவகங்கை புனித ஜஸ்டின் பள்ளி மாணவர் ஜெய்சன் சாம்பியன் பட்டம் பெற்றார். மாவட்ட நீச்சல் கழக நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.