/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
330 மாணவர்களுக்கு தமிழ்பாடம் ஒரே ஆசிரியர் நடத்துவதால் பாதிப்பு
/
330 மாணவர்களுக்கு தமிழ்பாடம் ஒரே ஆசிரியர் நடத்துவதால் பாதிப்பு
330 மாணவர்களுக்கு தமிழ்பாடம் ஒரே ஆசிரியர் நடத்துவதால் பாதிப்பு
330 மாணவர்களுக்கு தமிழ்பாடம் ஒரே ஆசிரியர் நடத்துவதால் பாதிப்பு
ADDED : செப் 25, 2025 05:01 AM
திருப்புவனம் : திருப்புவனம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் தமிழாசிரியர்களை பணியமர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்புவனம் ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 10 வகுப்பு வரை 333 மாணவர்கள் படிக்கின்றனர். 6 முதல் 10 வகுப்புகளில் குறைந்தது 2 முதல் 3 பிரிவுகள் உள்ளன. மாணவர்களுக்கு தமிழ் பாடம் நடத்த ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளார். தமிழ் பாடத்திற்கு ஒரு ஆசிரியர், ஆங்கிலத்திற்கு 3 ஆசிரியர், கணிதத்திற்கு 4, அறிவியலுக்கு 2, சமூக அறிவியலுக்கு 2 ஆசிரியர், இரண்டாம் நிலை ஆசிரியர்கள் 4 பேர் பணிபுரிகின்றனர்.
தமிழ் பாடம் நடத்துவதற்கு ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் இருப்பதால் மற்ற பாட ஆசிரியர்களே தமிழ் பாடம் நடத்த வேண்டிய நிலை உள்ளது. தற்போது அரசு வேலைக்கு அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் வினாக்கள் முதன்மை படுத்தப்பட்டுள்ளது.
எனவே மாணவர்கள் பள்ளியில் படிக்கும் போது தமிழில் புலமை பெற தமிழ் ஆசிரியர்களை கொண்டு தமிழ் வகுப்பு எடுத்தால் தான் சரியாக இருக்கும். எனவே மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் தமிழ் ஆசிரியர் நியமனம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.