/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தமிழகமே கொந்தளிப்பு அறநிலையத்துறை மவுனம்
/
தமிழகமே கொந்தளிப்பு அறநிலையத்துறை மவுனம்
ADDED : ஜூலை 05, 2025 02:39 AM
திருப்புவனம்:மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் கோசாலையில் போலீசாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு அறநிலையத்துறை சார்பில் ஆறுதல் கூறாமலும், உதவி செய்யாமலும் மவுனம் சாதித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயிலுக்கு ஜூன் 27 ல் வந்த பக்தர் நிகிதாவின் காரில் இருந்த தங்க நகை திருடு போனது. மானாமதுரை உட்கோட்ட குற்றப்பிரிவு போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் கோயில் பாதுகாப்பு நிறுவன ஊழியர் அஜித்குமாரிடம் 29, விசாரித்தனர்.
கோயில் அறநிலையத் துறை அலுவலகம் பின்புறம் உள்ள கோசாலையில் அஜித்குமாரை கட்டி வைத்து தாக்கியதில் உயிரிழந்தார்.
தமிழகம் முழுவதும் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சிகள், ஆர்ப்பாட்டம் அஜித்குமார் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வரும் போது அவர் பணி புரிந்த அறநிலையத்துறை சார்பில் எந்தவித ஆறுதலும் கூறவில்லை.
மாவட்ட அளவிலான அதிகாரிகள் கூட வரவில்லை. தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அறநிலையத்துறை அமைச்சர் கூட மவுனம் சாதிக்கிறார். கோயில் அருகே துக்கம் நடந்தாலே நடை சாத்தப்படும், பரிகார பூஜைக்கு பின் தான் திறக்கப்படும்.
ஆனால் கோயில் வளாகத்திலேயே அஜித்குமார் உயிரிழந்த நிலையில் இன்று வரை பரிகார பூஜை நடத்தப்படவில்லை. அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை.