ADDED : மே 07, 2025 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடியில் தடை செய்யப்பட்ட மெழுகு டீ கப் உட்பட பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
காரைக்குடி மாநகர் அலுவலர் வினோத் ராஜா தலைமையில், சுகாதார அலுவலர் சுருளிநாதன் உட்பட அதிகாரிகள் செஞ்சை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். மளிகை கடையில், ரூ.20 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட மெழுகு டீ கப், சில்வர் முலாம் பூசப்பட்ட டீ கப், பிளாஸ்டிக் தட்டுகள் பறிமுதல் செய்து ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.

