/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு; ஆசிரியர் 'போக்சோ'வில் கைது
/
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு; ஆசிரியர் 'போக்சோ'வில் கைது
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு; ஆசிரியர் 'போக்சோ'வில் கைது
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு; ஆசிரியர் 'போக்சோ'வில் கைது
ADDED : செப் 23, 2025 06:22 AM

சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் அரசுப்பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதுார் அருகே கட்டுக்குடிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிபவர் ஆரோக்கியசாமி 51.
இவர் அப்பள்ளியில் 6 ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, மாணவிகளின் பெற்றோர் நேற்று பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர், உலகம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து அவரை திருப்புத்துார் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி விசாரணை நடத்தி, ஆரோக்கியசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.