ADDED : ஜூலை 04, 2025 03:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: தொடக்கக் கல்வித்துறையில் பொது மாறுதல் கலந்தாய்வை அறிவித்துவிட்டு மாநிலம் முழுவதும் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் விதிகளுக்கு புறம்பாக, சட்டவிரோதமாக மாறுதல் ஆணைகளை வழங்கி வரும் தொடக்கக்கல்வித்துறையை கண்டித்து தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் புரட்சி தம்பி தலைமை வகித்தார்.
மாநில செயற்குழு உறுப்பினர்கள் முத்துப்பாண்டியன், ஜீவா ஆனந்தி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சகாய தைனேஸ் கோரிக்கை விளக்கி பேசினார். மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி நன்றி கூறினார்.