/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோடை கால எம்.பில்., படிப்பு செல்லாது அறிவிப்பால் ஆசிரியர்கள் போராட்டம்
/
கோடை கால எம்.பில்., படிப்பு செல்லாது அறிவிப்பால் ஆசிரியர்கள் போராட்டம்
கோடை கால எம்.பில்., படிப்பு செல்லாது அறிவிப்பால் ஆசிரியர்கள் போராட்டம்
கோடை கால எம்.பில்., படிப்பு செல்லாது அறிவிப்பால் ஆசிரியர்கள் போராட்டம்
ADDED : அக் 04, 2024 02:35 AM

காரைக்குடி:கோடை கால எம்.பில்., படிப்பு செல்லாது என்ற அரசின் அறிவிப்பால் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் 200க்கும் மேற்பட்டோர் காரைக்குடி அழகப்பா பல்கலையில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
காரைக்குடி அழகப்பா பல்கலையில் 2016-20-18ம் ஆண்டு வரை எம்.பில்., (கோடைகால தொடர் படிப்பு) வகுப்பு நடத்தப்பட்டது.
இதில், பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் எம்.பில்., (எஸ்.எஸ்.பி.,) பட்டம் பெற்றனர். இந்த எம்.பில்., படிப்பு யு.ஜி.சி., அங்கீகாரம் பெறாதது, எனவே இது செல்லாது என கல்வித்துறை தணிக்கை குழு தெரிவித்ததோடு ஊதிய உயர்வை கட் செய்ததாக கூறி 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பல்கலை வாயிலில் போராட்டம் நடத்தினர்.
ஆசிரியர்கள் கூறுகையில் அழகப்பா பல்கலையில் எம்.பில்., (எஸ்.எஸ்.பி.,) படித்தோம், இதன் மூலம் ஆசிரியர்கள் ஊதிய உயர்வு, பதவி உயர்வு பெற்று வந்தனர். இந்நிலையில் ஒரு சில மாவட்டங்களில், எம்.பில்., (கோடைகால தொடர் படிப்பு) யு.ஜி.சி., அங்கீகாரம் இல்லாதது என கல்வித்துறை ஆடிட்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதிய உயர்வு, பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இது சம்மந்தமாக அழகப்பா பல்கலை மேல் முறையீடு செய்வதற்கு வலியுறுத்தியும், முறையான நீதி வழங்க வேண்டியும் 2023ல் போராட்டத்தில் ஈடுபட்டோம்.
நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக பல்கலை தெரிவித்துள்ளது. ஆனால், தற்போது உயர்கல்வித் துறை, எம்.பில்., கோடை கால படிப்பு செல்லாது என்று மீண்டும் அறிவித்துள்ளது.
இதனால் எங்களது வாழ்வாதாரமே பாதிப்படைந்துள்ளது.
செல்லாத படிப்பை வழங்கி அழகப்பா பல்கலை எங்களை ஏமாற்றி விட்டது. எங்களுக்கு நியாயம் வழங்க அழகப்பா பல்கலை முன்வர வேண்டும் என்றனர்.