/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழப்பிடாவூர் பள்ளியில் ஆசிரியர்கள் மோதல்
/
கீழப்பிடாவூர் பள்ளியில் ஆசிரியர்கள் மோதல்
ADDED : பிப் 05, 2025 05:14 AM
மானாமதுரை: மானாமதுரை அருகேயுள்ள கீழப்பிடாவூர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்குள் மோதல் ஏற்பட்டு வருவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பிடாவூர் அரசு நடுநிலைப்பள்ளியில் சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று ரூ.1 லட்சம் வைப்புத் தொகை கட்டப்பட்டுள்ளது.
இப்பள்ளியில் 6 மாதங்களாக பெண் ஆசிரியை ஒருவர் மற்ற ஆசிரியர்களோடு ஜாதி ரீதியாகவும் பல்வேறு காரணமாக மோதலில் ஈடுபட்டு வருவதால் இரண்டு ஆசிரியர்கள் வேறு ஊர்களுக்கு பணி மாறுதல் வாங்கிச் சென்று விட்டனர். பள்ளி மேலாண்மை குழு தலைவர் கீதா, முன்னாள் ஊராட்சி தலைவர், பெற்றோர்கள்,கிராம மக்கள் மானாமதுரை வட்டார கல்வி அலுவலகத்தில் அந்த ஆசிரியை மீது புகார் கொடுத்தனர். கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: பள்ளியில் நடைபெறும் மோதல் போக்கு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.