/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் ஆசிரியர்கள் போராட்டம்
/
திருப்புத்துாரில் ஆசிரியர்கள் போராட்டம்
ADDED : டிச 13, 2025 06:47 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் வட்டாரத்தில் இடைநிலை ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை பேட்ஜ் அணிந்து ஆசிரியர்கள் பணியாற்றினர்.
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் தங்கள் பணியாற்றும் அரசு பள்ளிகளில் ஊதிய முரண்பாட்டினை சரி செய்ய கோரியும், தேர்தல் அறிக்கை எண் 311ன் படி சம வேலைக்கு சம ஊதிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் டிச. 1 முதல் பேட்ஜ் அணிந்து வகுப்புகளை நடத்தி வருகின்றனர். இயக்க தலைவர் லோகநாதன் கூறுகையில், கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை நாங்கள் பேட்ஜ் அணிந்தே பள்ளிகளுக்கு செல்வோம்.'என்றார்.
திருப்புத்துார் வட்டார நிர்வாகிகள் ஜோசப் செல்வராஜ், ராமமூர்த்தி,ஆனந்தராஜ் உடன் இருந்தனர்.

