ADDED : ஆக 16, 2025 02:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே 'குடி'மகன்களின் ஆக்கிரமிப்பில் கோயில் ஊருணி சிக்கியுள்ளதால் பக்தர்கள் வேதனைப்படுகின்றனர்.
பிரான்மலையில் முட்டாக்கட்டி ரோட்டில் உள்ள வேளார் குளம் பழமையான ஊருணி. இதன் கிழக்கு, மேற்கு கரைகளில் பழமையான விநாயகர் கோயில்கள் உள்ளன. மேற்கு கரையில் விநாயகர் சிலை முன் உள்ள இடத்தை 'குடி'மகன்கள் சிலர் ஆக் கிரமித்து மது அருந்துவதை வாடிக்கை யாக கொண்டு உள்ளனர். இதனால் கோயில், ஊருணியின் புனிதம் பாதிக்கப்படுகி றது. அங்கு வழிபாட்டுக்கு பக்தர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த ஊருணியை 'குடி'மகன் களின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கவும் ஊருணியை தூய்மைப் படுத்தி சுகாதாரமாக வைத்திருக்கவும் பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.