/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாவட்ட அளவில் ஒரே நாளில் சராசரி மழை 25.13 மி.மீ., பதிவு
/
மாவட்ட அளவில் ஒரே நாளில் சராசரி மழை 25.13 மி.மீ., பதிவு
மாவட்ட அளவில் ஒரே நாளில் சராசரி மழை 25.13 மி.மீ., பதிவு
மாவட்ட அளவில் ஒரே நாளில் சராசரி மழை 25.13 மி.மீ., பதிவு
ADDED : நவ 04, 2024 06:55 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் சராசரியாக 25.13 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
மாவட்டத்தில் ஆறு, கிணறு பாசனம் மூலமும், மானாவாரியாக விவசாயிகள் நெல், பருத்தி, நிலக்கடலை, பயறு வகைகளை நடவு செய்து வருகின்றனர். கடந்த மாதத்தில் இருந்தே இம்மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து, நீர்நிலைகளில் மழை நீர் தேங்கியுள்ளன.
இதனால், கண்மாய் பாசனம் மூலம் ஒரு போக நெல் சாகுபடி செய்வதற்கான பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மேலடுக்கு சுழற்சி மழையை தொடர்ந்து, வடகிழக்கு பருவ மழை நவ., மாதத்தில் இருந்து துவங்கிவிட்டன.
இதனால், நேற்று முன்தினம் முதல் மாவட்டத்தில் பரவலாக அனைத்து தாலுகாக்களிலும் நல்ல மழை பெய்துள்ளது.
இதனால், மானாவாரியாகவும், கண்மாய் பாசனம் மூலம் நெல் நடவு செய்த விவசாயிகள், போதிய தண்ணீர் கிடைத்த மகிழ்ச்சியில், நெற்பயிர்களுக்கு களைக்கொல்லி மருந்து தெளித்தல், கூடுதல் உரமிடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரம் தொடர்ந்து பலத்த மழை பெய்தால், வயல்களில் தண்ணீர் தேங்கிவிடாத படிக்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட சராசரி 25.13 மி.மீ., பதிவு
மாவட்ட அளவில் நேற்று முன்தினம் காலையில் இருந்தே பலத்த மழை பெய்ய துவங்கிவிட்டது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி மாவட்ட அளவில் சராசரியாக ஒரே நாளில் 25.13 மி.மீ., மழை பதிவானது.
அந்த வகையில் மானாமதுரை- 49 மி.மீ., இளையான்குடி 38, சிவகங்கை- 31.60, காரைக்குடி - 25, திருப்புவனம் - 22.20, சிங்கம்புணரி 21.60, தேவகோட்டை 15.40, திருப்புத்துார் -12.40, காளையார்கோவில் 11 மி.மீ., வரை பெய்துள்ளது.