/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நெடுஞ்சாலை ஓரத்தில் காத்திருக்கும் ஆபத்து
/
நெடுஞ்சாலை ஓரத்தில் காத்திருக்கும் ஆபத்து
ADDED : ஏப் 22, 2025 06:00 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நீட்டிக் கொண்டுஇருக்கும் கம்பிகளுடன் ஆபத்தான முறையில் கால்வாய் திறந்து கிடக்கிறது.
காரைக்குடி-திண்டுக்கல்தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தப்பட்ட போது சில இடங்களில் கால்வாய் பணி முழுமை அடையாமல் அரைகுறையாக விடப்பட்டது.
நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமலேயே சாலை மற்றும் கால்வாய் பணி முடிக்கப்பட்டதால் பல இடங்களில் வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. நீதிமன்றம் செயல்படும் நகர்மண்டப கட்டடத்திற்கு எதிரில் கால்வாய் பணிகள்முழுமை அடையாமல் விடப்பட்டதால் நீட்டிக்கொண்டிருக்கும் கம்பிகளுடன் கால்வாய் ஆபத்தாக திறந்தே கிடக்கிறது.
இரவு நேரங்களில் பலர் கால்வாயில் விழுந்து செல்லும் நிலை உள்ளது. கால்வாயை முறையாக மூடி, தேவையான இடங்களில் சிறு பாலம் அமைத்து ஆபத்தான பள்ளங்களை சரிசெய்ய பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.